பெட் கலாக்ஸி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி பட்டர்ஃப்ளைஸ் இணைந்து நடத்தும் அனைத்து இன நாய்கள் கண்காட்சி (All Breeds Dog Show – சீசன் 3) வரும் ஜனவரி 25, 2026 அன்று திருச்சி மோராய்ஸ் சிட்டியில் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் J. கார்த்திக், திருச்சி மாவட்ட வன அலுவலர் S. கீர்த்திகா (IFS), திருச்சி விமான நிலைய CISF துணை கமாண்டண்ட் திலிப் நம்பூதிரி, உதவி கமாண்டண்ட் ரோஹித் மாலிக், தேசியக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் D. பிரசன்னா பாலாஜி, BIM திருச்சி இயக்குநரும் உறுப்பினர் செயலாளருமான டாக்டர் அசித் கே. பர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாய்கள் வளர்ப்போர் மற்றும் செல்லப்பிராணி விரும்பிகளுக்கான இந்த கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision





Comments