திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும், 26.01.2026 குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 404 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (2025-26-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விபரம்),
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு-செலவு திட்டம் / தொழிலாளர் வரவு-செலவு திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், நலிவு நிலை குறைப்பு நிதி திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஐல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுபித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
26.01.2026 குடியரசு தினத்தன்று காலை 11.00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments