இன்று காலை திருவனந்தபுரத்தில் புதிய அம்ரீத் பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். அந்த ரயில் திருச்சி ரயில் சந்திப்பிற்கு வந்த பொழுது ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேசியக் கொடிகளை வைத்து அசைத்து உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். 100 பள்ளி மாணவர்கள் அந்த ரயிலில் ஏறி ஆசிரியர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்த ரயில் சேவை இயக்கப்படும். காலை 10:40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திற்கு இரவு 11:45 மணிக்கு சென்றடையும். நாளை முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்குவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments