இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னீட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திரா கணேசன் கல்லூரியிலும், 145 முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியிலும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.வே.சரவணன்,இ.ஆ.ப..அவர்கள் இன்று (23.01.2026) கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று. அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்தியாவில் 16 வது தேசிய வாக்காளர் தினம் 25.01.2026 ஐ கொண்டாடுவதை முன்னிட்டு, வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 145 – முசிறி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கொங்குநாடு கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில், மாணவாகள் மற்றும் ஆசிரியர்களால் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டு “எனது இந்தியா எனது வாக்கு” மற்றும் “இந்திய ஜனநாயத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” எனும்

கருப்பொருளை வலியுறுத்தி மனித சங்கிலி மூலம் அமைந்த இந்திய வரைபடம் வடிவில் நின்று உறுதிமொழி ஏற்று மற்றும் வாக்குப்பதிவு அளிக்கும் செயல்முறையினை இளம் தலைமுறை வாக்காளர்கள் அறித்து கொள்ளும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து வைத்தார். துவக்கி
மேலும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கல்லூரி வாகனங்களில் நுண்டு பிரசுரங்கள் ஒட்டுதல், தொடர்ச்சியாக வாக்களித்தவர்களை கௌரவித்தல், விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் (Signature Campaign), ரங்கோலிப்போட்டி, மாதிரி வாக்குச்சாவடி அமைத்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும்

இந்நிகழ்வுகளில், சிறப்பாக மாகெடுத்த மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக, 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்திரா கணேசன் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் இந்திய தேர்தல் ஆணைய இலச்சினை வடிவில் மாணவர்கள் நிற்கவைக்கப்பட்டு தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுக்கப்பட்பட்டது. மேலும், “எனது இந்தியா எனது வாக்கு” மற்றும் “இந்திய ஜனநாயத்தின் இதயத்தில் இந்திய குடிமகள்” எனும் கருப்பொருளை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.பாலாஜி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்களும் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதே போல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அரசுத்துறை அலுவலகங்களில் பள்ளி/கல்லூரி மாணவர்கள்/அலுவலர்களால் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, 16 வது தேசிய வாக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்நிகழ்வுகளில், முசிறி சார் ஆட்சியர் செல்வி.சுஷ்ரீ சுவாங்கி குந்தியா இ.ஆம், அவர்கள், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் திருந.சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.பாருக் அவர்கள், நேர்தல் வட்டாட்சியர் திரு.சக்திவேல் முருகன், இந்திரா கணேசன் கல்லூரி செயலர் பொறி ராஜசேகரன், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.பி.எஸ்.கே.ஆர்.பெரியசாமி, அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments