திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி திருச்சி வடக்கு மாவட்ட சார்பில், மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டத்தின் பெயரை மாறுதல் செய்து மாநில அரசுகளுக்கான நிதியை குறைத்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்,
அப்போது “மத்திய அரசே மோடி அரசே முடக்காதே முடக்காதே, ஒன்றிய அரசின் நிதியை குறைத்து 100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே, முடக்காதே, 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மாகாந்தியின் பெயரை நீக்காதே, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்துகின்ற 100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே, சோனியா காந்தி தலைமையில் காங்கிரசால் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்காதே, கிராமப்புற வேலைவாய்ப்பை உயர்த்துகின்ற திட்டமான மகாத்மாகாந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை திட்டம் இது,
வேலை என்பது சலுகையல்ல மக்கள் உரிமை என்றும் முழககங்கள் எழுப்பினர், ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments