திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் சார்பில் மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்றுமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஏழை எளிய பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் ஏதுவாக தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் நலம் தாக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் தமிழகம் முழுவதும் நடத்த அறிவுறுத்தி உள்ளார் அதன்படி நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விதமான மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவர் பரிசோதனை ஆலோசனை மற்றும் மேற்சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்படுகின்றனர்.
மேலும் இதனை அடுத்து திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 க்குட்பட்ட பொன்மலை பகுதி 45 வது வார்டில் உள்ள அரசு உதவி பள்ளியில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் இந்த மருதவ முகாமில் பொது மருத்துவம் ,காது, மூக்கு, தொண்டை, இதயவியல் ,கண், பல், மனநலம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவர் துறையைசேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவஆலோசனை பரிசோதனை மற்றும் வேர் சிகிச்சைக்கான அறிவுரைகளை வழங்கினர்.
இந்த நிலையில் முன்னதாக முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால பெட்டக 10 பேருக்கும், நலம் காக்கும் ஸ்டாலின்மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 5 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. மேலும்இந்த முகாமில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ், ரமேஷ், சீதாலட்சுமி முருகானந்தம், பியூலாமாணிக்கம், சுரேஷ், திருச்சி மாநகராட்சி நகர் நில அலுவலர் சுபாஷ் காந்தி சுகாதார அலுவலர் தலைவிரிச்சான் உதவி நகர் நல அலுவலர் எழில் நிலவன் மற்றும்
மண்டலம் 3 ன் உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார் ஜனனி மணிகண்டன் அப்புராஜ் ரமிலா உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments