Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியில் முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் பந்தல்கால் நட்டு பணிகள் துவக்கி வைத்தார்

தை மாதம் தொடங்கினால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமர்சையாக நடைபெறுகிறது வழக்கம்.

தமிழகத்தை பொறுத்தவரை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் திருச்சி மாவட்டத்தில் சூரியூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் சூரியூர், லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளை ஆயிரக்கணக்கான காளைகளும் ஆயிரக்கணக்கான மாறுபடி வீரர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக அரசால் கட்டப்பட்ட சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் கார் வழங்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக வருகிற 22 ஆம் தேதி முதல் முறையாக திருச்சி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டிக்கான பந்தல் கால்நடும் நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பந்தல் கால்நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து சுமார் 750 க்கு மேற்பட்ட காளைகளும் 600க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கு பெற உள்ளனர்.

இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நகராட்சியை விட்டு வெளியே நடைபெற்று வந்த நிலையில் முதன்முறையாக திருச்சி நகராட்சி பகுதியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சியில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருச்சிக்கு வெளியே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண முடியாத பொதுமக்கள். இதனை உற்சாகமாக நேரில் சென்று காண்பார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *