தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பணிகளில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன்படி தேர்தல் வாக்குறுதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதேபோல நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல் முதலாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சியில் தேர்தல் அறிக்கை மக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைமை நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் சம்பத்குமார், அருள் பிரகாசம் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கருத்து கேட்பது கூட்டத்தில்
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர். அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் விவசாயிகள், தொழில் அதிபர்கள் தேர்தல் அறிக்கையில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கையாக கொடுக்க வேண்டிய வாக்குறுதி குறித்தான மனுக்களை வழங்கினர்.
தமிழக வெற்றி கழகத்தில் மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாகளுக்கு அளித்த பேட்டியில்
பெரும்பாலான மனுக்கள் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி. பள்ளிக்கூட வசதி பூர்த்தி செய்யாமல் இருப்பதாக கேட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளின் குறைகளை தெரிவித்துள்ளனர்.
திருச்சி தலைநகரமாக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது.
வரி ஏய்ப்பு என பொத்தாம் பொதுவாக கூற கூடாது. காலம் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம்.
நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
மதுவிலக்கு தேவை என்று கூறியிருக்கின்றனர். டாஸ்மார்க் குறைப்பு என்று மனுக்கள் கொடுத்திருக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் ஓய்வூதியம் திட்டம் குறித்து மனுக்கள் வழங்கி உள்ளனர்.
திருச்சி தொகுதியில் விஜய் நிற்பார் என்று கூறப்படுகிறதே.
பெரும்பாலானோர் தங்கள் தொகுதிகளில் விஜய் நிற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
கூட்டணி குறித்து தலைவர் அறிவிப்பார்.
ஐம்பதாயிரம் நபர்களுக்கு மேல் அதிகமாக கூடும் பொழுது 30நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுக மாநாடுகளுக்கு உடனடியாக எப்படி வாய்ப்பு கிடைக்கிறது இது ஜனநாயகமா.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments