Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.12-ல்திருச்சி தெற்கு மாவட்ட முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

திருச்சி தெற்கு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவையும் துணை போகும் அதிமுகவையும் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும் – அதற்கு ஒத்து ஊதி துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில், பிப்ரவரி 12 – வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் திருச்சி தெற்கு மாவட்ட முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டை

புறக்கணித்து. தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அ.தி.மு.க.வையும் கண்டித்து கீழ்கண்ட மாநகர, ஒன்றியம், நகரம், பேரூர் கழகங்களில் 12.02.2026-வியாழக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி தோழர்கள், மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், பகுதி ஒன்றிய நகர பேரூர் வட்ட வார்டு கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *