திருச்சி சீட்டு கம்பெனியில் 85 லட்சம் மோசடி- குவியும் புகார்கள்திருச்சி கருமண்டபம் பகுதியில் சக்தி கண்ணன் சிட்ஸ் இயங்கி வந்துள்ளது.

இதில் நூற்றுக்கணக்கானோரிடம் பல்வேறு தொகைகளில் சீட்டு நடத்தி வந்தனர். பொதுமக்கள் ஏராளமான தொடர்ந்து மாத சீட்டு தொகைகளை கட்டி வந்த நிலையில் திடீரென சக்தி கண்ணன் சிட்ஸ் மூடப்பட்டது. இது தொடர்பாக அலுவலக ஊழியரிடம் தொடர்பு கொண்ட பொழுது யாரும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை பின்னர் அவர்கள்

தலைமறைவாகிவிட்டனர் உடனடியாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருச்சி மாநகர குற்ற பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர் அந்த புகாரில் 85 லட்சம் ரூபாய் வரை சக்தி கண்ணன் சிட்ஸ் ஏமாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சக்தி கண்ணன் சிட்ஸ் உரிமையாளர்கள் வினோத் குமார்,கலை கண்ணண் சுகுமார்,கோவிந்தராஜன் உள்ளிட்ட. 4 பேரை மாநகர குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த சீட் நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் தொடர்ந்து புகார் கொடுக்கலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 4 பேரையும் கைது செய்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments