Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிஷப் ஹீபர் கல்லூரியில் ‘தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்லியல் தளங்கள்’ குறித்து ஒருநாள் பட்டறை

தமிழ்நாட்டில் உள்ள சமீபத்திய தொல்லியல் தளங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை, பிப்ரவரி 11ஆம் தேதி திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறையில் நடைபெற்றது. வரலாற்று துறையின் தலைவர் முனைவர் ஃபெமிலா அலெக்சாண்டர் அனைவரையும் வரவேற்று பேசினார். இவரின் உரையில் வரலாறு என்பது கதை அல்ல நடந்த உண்மைகள்.

உண்மை அல்லாத எவற்றையும் வரலாறாக ஏற்றுக் கொள்ள முடியாது. வரலாறு என்பது இதிகாசம் அல்ல இதிகாசங்களின் அடிப்படையில் வரலாறு எழுதப்படாது எழுதவும் கூடாது. இதிகாசங்களில் தான் வரலாற்று உண்மைகளை கற்பனையோடு கலந்து எழுதப்படுகிறது.

பொய்களையும் புனைவுகளையும் வரலாறு, வரலாறாக ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்லியல் ஆய்வுகளின் மூலமாக கண்டறியப்படுகின்ற உண்மைகள் என்ன அவற்றை மாணவர்கள் ஏன் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் இந்த பயிற்சி பட்டறையின் அவசியம் என்ன, நோக்கம் என்ன, என்பதையும் தெளிவாக எடுத்துரைத்து மாணவர்களை பயிற்சிக்கு நேராக வழி நடத்தி வந்திருந்தவர்களையும் வரவேற்றார்.

கல்லூரியின் துணை முதல்வர் ஜே ஜி ஆர் சத்தியசீலன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். முதுகலை வரலாற்று துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஷீபா பிரின்சஸ் வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சி பட்டறையில், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் வரலாற்றுத் துறையின் இணை பேராசிரியர். வெ. மாரப்பன் அவர்கள் கலந்துகொண்டு தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலமாக பல தரவுகளை சுட்டிக்காட்டி தமிழர்களின் வரலாற்று காலச்சுவடுகளை, நாம் எவ்வாறு கண்டறிந்து கொள்ள வேண்டும்.

கீழடி ஆய்வு தமிழர்களைப் பற்றி உலகிற்கு பறைசாற்றும் உண்மைகள் என்ன, என்னென்ன உண்மைகள் இன்றைய நிலை இன்றைய நாள் வரைக்கும் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து மிகத் தெளிவாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

மேலும் கீழடியை முழுமையாக தொல்லியல் துறை ஆய்வறிந்தால் இன்னும் பல உண்மைகளும் நம்முடைய காலத்தின் கணிப்புகளும் தமிழர்களின் வரலாறும் தமிழ் எழுத்துக்களின் தொன்மையும் வெளிவரும் என்பதை செய்தியாக கூறினார். கீழடி பற்றிய உண்மைகள் சரியாக உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டால் தமிழர்கள் தான் நாகரிகத்தில் முன்னோடி என்பது உலகம் அறிந்து கொள்ளும் என்பதை தரவுகளின் மூலமாக எடுத்துரைத்தார்.

65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் மொழி என்றும் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது சமஸ்கிருத மொழி என்றும் ஆதாரங்களின் வாயிலாக எடுத்துரைத்தார் .தமிழ் மொழிக்கு சொல்லப்படுகின்ற புராண கதைகளின் திரிபுகளைப் பற்றி மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினார்.

சிவகங்கை மாவட்டத்தின் அரசினர் பெண்கள் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர் முனீஸ்வரன் அவர்களும் இந்த பயிற்சி பட்டறையில், கல்வெட்டியலை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தமிழ் எழுத்துக்களின் சிறப்புகள் என்ன அது கடந்து வந்த பாதை என்ன என்பதை பட்டெழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துக்கள் என்ற வித்தியாசங்களை பற்றிய பயிற்சி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த பயிற்சி பட்டறையின் நிறைவில் மாணவர்களின் கேள்விகளுக்கு இரு வரலாற்று நிபுணர்களும் பதில் உரைத்து மேலும் மாணவர்கள் இந்த தொல்லியல் துறையிலும், கல்வெட்டியல் துறையிலும் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி பயிற்சி பட்டறை நிறைவு செய்தனர். இந்த பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்திருந்த உதவி பேராசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.

பயிற்சி பட்டரையின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி பட்டறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் முனைவர் ஜெப ஷைனி அவர்கள் செய்திருந்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *