திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டாலும் அவன் காணாமல் போனதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக் கோரியும் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு கோரியும் நரிக்குறவ மக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சி, பூலாங்குடி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த சூர்யா (30) – ரம்பா (26) தம்பதியினரின் 11 வயது மகன் நேற்று வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிக்கச் சென்றபோது திடீரென காணாமல் போனார்.நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர். தகவல் அறிந்து நவலப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மர்ம நபர்கள் கருப்பு நிற கார் மூலம் வந்து, சிறுவனை சாலையோரத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது சிறுவன் மீட்கப்பட்டபோது உடல்நிலை பாதித்த நிலையில் காணப்பட்டதாகத் தந்தை சூர்யா தெரிவித்தார்.மேலும் இப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி, சிசிடிவி கேமராக்கள் மற்றும் முறையான சாலை வசதிகள் இல்லாததே குற்றச்சம்பவங்களுக்குக் காரணமாக அமைவதாகக் கூறி, நரிக்குறவர் மக்கள் பூலாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

சம்பவத்தால் அப்பகுதிகள் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments