இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் 13.02.2026 அன்று “மஞ்சப்பை விழிப்புணர்வு உறுதிமொழி” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, மாணவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சங்கம், திருச்சிராப்பள்ளி ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வின் நோக்கம் நெகிழி பைகள், ஒற்றை முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குவளைகள் போன்ற நெகிழி பொருட்களின் பயன்பாட்டை குறைத்து, துணி பைகளின் உபயோகித்தின் அவசியத்தை வலியுறுத்துவது ஆகும்.
இந்நிகழ்வில் நிறுவனங்களின் செயலாளர் G. இராஜசேகரன், இயக்குநர் Dr. G. பாலகிருஷ்ணன், பதிவாளர் Dr. M. அனுசியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். அவர்கள் தங்கள் உரையில், நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து, நெகிழி பைகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை முழுமையாக அகற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். எதிர்கால தலைமுறைகளுக்கான சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உலகை உருவாக்குவதில் இத்தகைய முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
இந்திரா கணேசன் குழுவின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இருந்து மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் சங்க அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேலும், மாணவர்கள் அனைவரும் நெகிழி பயன்பாட்டைத் தவிர்க்கவும், துணி பைகளை உபயோகிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
“நாம் நெகிழியை தவிர்ப்போம் – பசுமையை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments