Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

முசிறி அருகே கொளக்குடி பகுதியில் தண்ணீர் தேடிச் சென்ற ஆண் புள்ளிமான் 75 அடியுள்ள தண்ணீருடைய கிணற்றில் தவறி விழுந்தது, முசிறி தீயணைப்புத் துறையினர் மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து காட்டில் விடப்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பளம் வனப்பகுதி உள்ளது, அப்பகுதிகளில் அதிகளவு மான்கள் உள்ளதால் அடிக்கடி தொட்டியம் குலக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் தேடி மான்கள் வருவது வழக்கமாக உள்ளது, இந்நிலையில் சுமார் 6 மாதம் வயதுடைய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்துள்ளது, தண்ணீர் தேடிச் சென்ற பொழுது சுமார் 75 அடி தண்ணீரில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உள்ளது,தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் முசிறி அழைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார், உடனடியாக முசிறி தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் சரவணன் மற்றும் வீரர்கள்

நிகழ்விடத்திற்கு வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மானை உயிருடன் மீட்டனர், உயிருடன் மீட்கப்பட்ட ஆண் புள்ளி மானை வனக்காவலர் ரவிச்சந்திரன் இடம் ஒப்படைத்தனர், அவர் மானை பெற்று அருகில் உள்ள காட்டில் விட்டார்கள், கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டு காட்டில் விடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியது..

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *