திருச்சியில் புரோட்டா மாஸ்டர் நண்பர்கள் கோர விபத்தில் சிக்கி நேர்ந்த துயரம்திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 30) இதே போன்று சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30) திருச்சி மாவட்டம் வளநாடு கைகாட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25)இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள மெஸ்ஸில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் செல்ல திட்டமிட்டனர் இதை எடுத்து இன்று காலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கருமண்டப பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றனர் இவர்கள் கருமண்டபத்தில் மெயின் ரோட்டில் வாகனம் எதிரே வரும் திசையில் அதாவது ராங் ரோட்டில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று உள்ளனர். அப்பொழுது எதிரே திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி மீது எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் மோதியது இந்த விபத்தில் சம்பவ இடத்திலே தலையில் பலத்த காயமடைந்து வினோத் மற்றும் ரமேஷ்

ஆகிய இரண்டு பேரும்உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர் இந்த விபத்தில் சரவணகுமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கண் டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து போலீசார் காயமடைந்த சரவணகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த வினோத், ரமேஷ் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்
மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments