திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடியில் பகுதியில் நரிக்குறவர் காலனி உள்ளது.
இங்கு 500க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது,

அங்கு பூலாங்குடி காலனியைச் சேர்ந்த சச்சின் (25) மற்றும் அவரது நண்பர் சத்திய நாராயணன் (24) ஆகிய இருவரும் போதையில் அந்த சிறுமிகளை துரத்தி அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த சிறுமிகள் கூச்சலிட்டவுடன் நரிக்குறவர் இன குடியிருப்பு வாசிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இருவரையும் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீசார் சச்சின் மற்றும் சத்யநாராயணன் ஆகிய இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சச்சின் மற்றும் சத்யநாராயணன் ஆகிய இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் சச்சின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமிகளிடம் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் நரிக்குறவர் காலனி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments