Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் அருகே மாணவனை மண்வெட்டியால் வெட்டிய சக மாணவன்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவனை சக மாணவன் மண்வெட்டியால் தலையில் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசன்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேல அரசன் குடியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கார்த்திக் (13) என்பவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் நடராஜபுரம் லூர்து நகரச் சேர்ந்த சுஜன் ( 13 ) என்ற மாணவனும் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை ஜல்லி அள்ளி கொட்டும் வேலையை செய்ய வைத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மாணவர்கள் ஜல்லியை அள்ளி கொண்டிருந்த பொழுது.

கார்த்திக்கிற்கும் சுஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த சுஜன் தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து கார்த்திக்கின் தலையில் வெட்டியுள்ளான் இதில் பலத்த காயமடைந்த கார்த்திக்கை பள்ளி ஆசிரியர்கள் அரசன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேற்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கார்த்திக் சேர்க்கப்பட்டு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உடல்நிலை குறித்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி திருச்சி தலைமை மருத்துவரிடம் தொலைபேசியில் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு மாணவனுக்கு தேவையான அனைத்து உயர் ரக சிகிச்சைகளையும் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *