வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே ஜூலை 11ம் தேதியன்று கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது.

மேலும் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர்கள், கேரளத்தைச் சேர்ந்த 2 பேர்கள் அடங்குவர். படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் நேற்று விமானம் மூலம் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து உடல்கள் இன்று சென்னை, கோவை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர்களிம் உடல்கள் இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டது. பின்பு உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோன்று கோவை விமானநிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் சேர்ந்த அழகுராஜா, ஸ்ரீரங்கம் கொண்டயம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி, பீமநகர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய 3 நபர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கபட்டது.
உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் கதறி அழுகும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சட்டபேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர், மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ, முன்னாள் அமைச்சர் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே என் நேரு உயிரிழந்த அழகுராஜா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments