Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

திமுகவின் இடைக்கால பட்ஜெட் என்பது வெங்காயத்தை உரித்தால் எப்படி இருக்குமோ அதுபோல ஒன்றும் இருக்காது. தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது குறித்த கேள்விக்கு … அவர்களை கூறி விட்டார்கள், யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எங்கே போக வேண்டுமோ போவோம் என்கிறார்கள், போய்விட்டார்கள்.

திமுகவின் எதிர்ப்பு மற்றும் கூட்டணியின் பழம் பற்றியும் எடுத்துரைத்து தேர்தலை சந்திப்போம். வைகோ அப்பிராணி அவரைப் பாவம் வயது முதிர்ந்தவர், நோ கமெண்ட்ஸ்.

தேர்தலுக்குப் பிறகுதான் விஜயின் சக்தி என்ன என்பது தெரியவரும், விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை தேர்தல் பரபரப்பில் அனைவரும் இருக்கும் நிலையில் அமெரிக்க மாடலில் மக்களை சந்திக்காமல் டிவியில் பிரச்சாரம் செய்யப் போகிறார் போல, அங்கெல்லாம் அதுபோலதான் செய்கிறார்கள் என்ன ஐடியாவில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

ஐந்தாயிரம் ரூபாய் அறிவுக்கு என்பது நமது பணத்தை தான் அவர்கள் தருகிறார்கள் இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் விலைவாசி உயர்வு மின்சார உயர்வு என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது இந்த ஆட்சி இருந்தால் சரி இருக்காது என மக்கள் எண்ணுகிறார்கள் என்றார்.

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கட்சி ஆரம்பிக்க உள்ளதும், ஆதரவளிப்பீர்களா குறித்து கேள்விக்கு அவர் கட்சி அறிவிப்பாரா, என்பது தெரியாது ஆரம்பித்த பிறகு ஆரம்பித்தபிறகு கேட்கிற கேள்விக்கு பதில் கூறலாம் என்றார்.

ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும் என்ற திமுகவின் பிரச்சாரம் போல எடப்பாடி வெல்லட்டும் தமிழக முன்னேறட்டும் என்ற பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுப்போம், திமுக காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு, தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது திமுக தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார் அது சரியாவராது என்று.

பாஜக அதிக சீட்டு கேட்பது குறித்து இன்னும் பேசவில்லை பேசிக்கொண்டே இருக்கிறார்கள், தேர்தல் அறிக்கைகளை இன்னும் நாட்கள் உள்ளது.

பிரதமர் வருவது என்பது பிரச்சாரத்திற்காக மேடையில் ஏறும்போதுதான் யார் இருப்பார்கள் என்று தெரியும், அதிசயங்கள் நடக்கும் வெளியே சொல்ல மாட்டார்கள் என்றார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *