Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி – தாம்பரம் ரயில் நிரந்தரம்; திருப்பதி – ராமேஸ்வரம் சேவை அதிகரிப்பு: திருச்சி எம்.பி. முயற்சியால் முக்கிய அறிவிப்பு!

திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் நிரந்தர விரைவு இரயிலாக மாற்றப்பட்டு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதற்கும், திருப்பதி – இராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வாரத்தில் நான்கு நாட்களாக அதிகரிக்கப்பட்டதற்கும் எனது மனமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியான வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில், திருச்சி – தாம்பரம் இடையேயான சிறப்பு இரயில் (06190/06191) இனி நிரந்தர விரைவு இரயிலாக (16808/16807) இயக்கப்படும் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (20.02.2026) தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்த இரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை 10.12.2025 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சரிடமும், 30.01.2026 அன்று தென்னக இரயில்வே பொதுமேலாளரிடமும் தொடர்ந்து முன்வைத்தேன். மேலும், சிறப்பு இரயிலாக இயங்கிய காலத்திலேயே திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற எனது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று அந்நிறுத்தம் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்த நிரந்தர விரைவு இரயில், வாரத்தில் ஐந்து நாட்கள் (செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளைத் தவிர) இயக்கப்படும். இந்த சேவை 01.03.2026 முதல் தொடங்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி வழியாக இயக்கப்படும் திருப்பதி – இராமேஸ்வரம் விரைவு ரயில் சேவை வாரத்தில் மூன்று நாட்களிலிருந்து நான்கு நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இரு முக்கிய அறிவிப்புகளும் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். தொடர்ந்து நான் மேற்கொண்டு வரும் எனது முயற்சிகளின் விளைவாக ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் மக்கள் பயனடைவதை எண்ணி நான் மகிழ்கிறேன்.

அதுபோல, இந்த சேவைகளை அமல்படுத்திய தென்னக இரயில்வே துறைக்கும், ஒன்றிய இரயில்வே அமைச்சகத்துக்கும், மதிப்பிற்குரிய இரயில்வே அமைச்சர் திரு . அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி தொகுதி மக்களின் இரயில் பயணத் தேவைகளை மேலும் மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *