மதுரை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த யாசின் மகன்முகமது நிஜாமுதீன் 30 பெங்களூரில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தவர்.
இந்த நிலையில் மாலை துவரங்குறிச்சியில் இருந்து நாகமங்கலத்திற்கு அவர் இரு சக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போதுவெற்றிவேல் என்பவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி அவரது காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த நிஜாமுதீன் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் நிஜாமுதீன் தூக்கி வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு கட்டையின் மீது மோதி தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான நிஜாமுதீனின் உடலை மீட்டு உடல் கூறுஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி

வைத்தனர். மேலும் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments