Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஜீவா நகரில் ரயில்வே பாதை ஓர முட்புதர் அகற்றம் – விஷ ஜந்துக்கள் கட்டுப்பாட்டுக்கு துரை வைகோ ஆய்வு

இன்று (22.02.2026) எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரத்தில் ராமகிருஷ்ணா திரையரங்கம் பின்புறம் உள்ள ஜீவா நகரில் அருகில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைக்கு அருகில் அதிக அளவில் முட்புதர்கள் வளர்ந்து உள்ள காரணத்தால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றது என்று பொதுமக்கள் என் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று ரயில்வே அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை பிடித்து அகற்ற மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைத் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். அதன் பின்னர், ரயில்வே இருப்புப் பாதை ஓரங்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள முட்புதர்களை முழுமையாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்.

ரயில்வே அதிகாரிகளும் முட்புதர்களை உடனடியாக அகற்றி வழங்குவதாக உறுதியளித்தனர். அதே நேரத்தில், அப்பகுதியில் சிலர் குப்பை கொட்டுவதும் இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதால், பொதுமக்களும் குடியிருப்புவாசிகளும் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *