Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

காட்டுப்புத்தூர் அருகே சட்டவிரோத மணல் ஏற்றிய வேன் பறிமுதல்; 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே
காட்டுப்புத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட உண்ணியூர் காவிரி ஆற்று பகுதியில் அதிகளவு இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து காட்டுப்புத்தூர் போலீசார் ரோந்து பணியில் சென்ற பொழுது உண்ணியூர் காவிரி ஆற்று பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பொலிரோ பிக் அப் வேனில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர்,

போலீசார் பொலிரோ பிக் அப் வேனை சுற்றி வளைத்து பிடித்தனர், அரை யூனிட் மணல் ஏற்றிய நிலையில் பொலிரோ பிக்கப் வேனை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர்,

விசாரணையில் காடுவெட்டியை சேர்ந்த சதீஷ்குமார், கோபி, கூன்ரக்கம்பட்டி சிவபிரகாஷ் ஆகிய மூன்று பேர் கைது, காட்டுபுத்தூர் போலீசார் நடவடிக்கை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *