Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ‘வனமும் வாழ்வும்’ திட்ட நிறைவு விழா: 500 மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கல்!

இன்று 23.02.2026 திருச்சிராப்பள்ளி மாவட்ட வன அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வனமும் வாழ்வும்’ திட்ட நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா டாக்டர்.இரா.காஞ்சனா இ.வ.ப., வனப்பாதுகாவலர் திருச்சி அவர்களின் அறிவுரையின்படியும். திருமதி.சீ.கிருத்திகா இ.வ.ப. மாவட்ட வன அலுவலர் திருச்சி மற்றும் திரு.ஐ.காதர்பாட்ஷா உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் ஆலோசனையின்படி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வனத்துறையின் அங்கமான மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் (AIWC) மூலம் தமிழ்நாடு முழுவதும் 20,000 பள்ளி LEXT 6001631, மாணவியருக்கு வனமும் வன உயிரினங்களின் பாதுகாப்பும் சவால்களும் தீர்வுகளும், வனப்பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, பறவைகளின் வாழ்க்கை, காட்டுயிர்கள் கணக்கெடுப்பு மற்றும் மனித-வனவிலங்கு மோதல் எதிர்க்கொள்ளுதல் தொடர்பாக வழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ‘வனமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, பள்ளிக்கு 20 மாணவர்கள் வீதம் மொத்தம் 500 மாணவ, மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காகக் கடந்த 17.11.2025 மற்றும் 18.11.2025-ம் தேதி 25 பள்ளி ஆசியிரிகளுக்குத் தொடக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி தொகுப்பு அடங்கிய பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டு.

கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கான பயிற்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

மாணவர்களுக்கான இப்பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதன் நிறைவு விழா திருச்சிராப்பள்ளி மாவட்ட வன அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் திரு.உதயகுமார் நேர்முக உதவியாளர், முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வித்துறை, திருச்சிராப்பள்ளி வருகைப்புரிந்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

பின்னர் மாவட்ட வன அலுவலர் அவர்கள் தலைமையுரையாற்றி பேசுகையில் வனவிலங்குகளை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் இத்தகைய பயிற்சி மாணவர்களிடையே வன உயிரினங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் திரு.ஜெ.ரவி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *