திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துவரங்குறிச்சியில் கடைவீதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை கடந்த 29.12.2025 அன்று குமார் (எ) சோனி குமார் 38/25, த.பெ. கோவிந்தன், ஒட்டகார தெரு, கீழவாசல், தஞ்சை மாவட்டம் என்பவர் உடைத்து, கடையிலிருந்த சுமார் ரூ.60,000 மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றதாக கடையின் உரிமையாளர் செல்வக்குமார் 30/25, த.பெ. சொக்கலிங்கம், திடீர் நகர், துவரங்குறிச்சி என்பவர் கொடுத்த புகார் மனுவிற்கு துவரங்குறிச்சி காவல் நிலைய குற்ற எண். 21/26, U/s 331(4), 305 BNS கீழ் 24.01.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, 25.01.2026 அன்று எதிரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளி குமார் (எ) சோனி குமார் 38/25, த.பெ. கோவிந்தன், ஒட்டகார தெரு, கீழவாசல், தஞ்சை மாவட்டம் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப, அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (23.02.2026) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை

தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 18 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments