திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ 2343.50 லட்சம் மதிப்பில்
வீட்டுமனை பட்டா 215 பேரூக்கும்
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் 80 பயனளிகளுக்கு 2800 லட்சம் மதிப்பிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட தொழில் மையம் தொழிலாளர் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய 11 துறைகள் 840 பயனாளிகளுக்கு 5978. 58 லட்சம்மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி பயனாளிகளுக்கு நன்மை பயக்கும் விழாவாக இந்த விழா நடைபெறுகிறது.
கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை என கோரிக்கை வைத்தது கடந்த நான்கு வருடமாக சுமார் 16,000 பேருக்கு வீட்டு மனை பட்ட பெற்று கொடுத்தது பெருமையாக உள்ளது என்றும் இதனைப் பெற்று தருவதற்கு காரணமாக உழைத்த அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதேபோல் இது போன்ற விழாக்களில் மாற்று திறனாளிகள் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தொகுதிகளை சேர்த்து வழங்குவது என்றும் மகிழ்ச்சியாக உள்ளது அது போல் தற்போது 59 கோடி ரூபாய் மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும்
பட்டாவை கொண்டு வந்தவர் கலைஞர் என்றும் கால் கிரவுண்டு நிலமாக இருந்தாலும் சொந்த நிலமாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் அதில் தூங்கிவிடுகிறேன் மின்சார வசதி கிடைக்கும் இதில் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று இல்லாமல் நாம் அனைவருக்கும் இதனை பெற்று தருகிறோம் நாமக்ககு எதிற் வீட்டில் இருக்கின்ற பெண்ணிடம் இனி என்னை புறம்போக்கில் இருக்கிறேன் என சொல்ல மாட்டார்கள் என இந்த பட்டாவை காண்பித்து கூறுகின்ற ஒரு பெண்மணி கூறுவதாக கூறினார்.
எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் தமக்கு வாக்களிக்காதவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை காக்க வேண்டும். ஓட்டு கேட்க மட்டும் என்னை நீங்கள் கூட்டிக்கொண்டு போவது வேலையல்ல இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது.
தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மக்களுக்கும் தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது தற்பொழுது இன்று 11 வகையான திட்டத்தின் மூலம் 840 பேருக்கு ரூபாய் 59 கோடி மதிப்புக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் இதில் நீண்ட கால கோரிக்கையான பட்டா மாற்று திறனாளிகள் மகளிர் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட வாழ்வியல் துறை சார்ந்த திட்டங்கள் வழங்கப்படுகிறது
திருச்சி மாவட்டத்தில் 87 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது அதில் திருவெறும்பூர் பகுதியில் 14,64 பேருக்கு வீட்டுமனை பட்டா மிகப்பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் துறைச்ச சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஆகும்.
எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆதிதிராவிடர் நலத்துறை கொடுக்கப்பட்டுள்ள பட்டாவிற்கு இடம் அளந்து கொடுக்கவில்லை என பத்திரிக்கையாளர்கள் கேட்டிருந்தனர் தற்போது அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படுகிறது திருவெறும்பூர் பகுதியில் கோர்ட் உழவர் அங்காடி உள்ளிட்டவை அமைப்பதற்கு துரை சார்ந்த அமைச்சர்களிடம் மனு கொடுத்து இருக்கும் போது குறித்து கேட்டதற்கு துவாக்குடி கால்நடை மருத்துவமனை கூட அமைப்பதற்கு மனு கொடுத்துள்ளதாகவும் தமிழக அளவில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இதனால் தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரியிடம் பேசி வருவதாகவும் அடுத்த 2.0 ஆட்சி அமைந்த உடன் செய்து தரப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதிய ஒரு சரியான வாய்ப்பு உதவியாளர்கள் ஒதுக்கப்படவில்லை என சுற்றறிக்கை வரவில்லை என கேட்டதற்கு
சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அது தெரியவில்லை என்றால் கடந்த ஆண்டுகளில் மாற்றத்தினால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர் பணி மூலமாக வைத்து தேர்வு எழுதலாம் என கூறியிருந்தனர் கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு பின் பற்றப்படும் சுற்றறிக்கை தெரியவில்லை என்றால் தற்பொழுது உங்களது வாயிலாக அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் நான் வாய் மொழியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
இந்த விழாவில் மண்டலம் மூன்றும் தலைவர் மு.மதிவாணன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ், பேரூர் கழக செயலாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments