திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது..

இந்த போட்டியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் சாலைகளில் தடுப்புகள் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கட்டி வைத்திருந்தனர்.. இதில் ஒரு சில மாடுகள் கட்டுக்கடங்காமல் தெறித்து ஓடியது.. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த போது திடீரென காளை முட்டியதில் பிரதீப் (16) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை பிரதீப் (16)
அழகாபுரி, தோகமலை கரூர் மாவட்டம் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
முக்கியமாக திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. இதற்கு முன்னதாக அண்ணா விளையாட்டரங்கில் ஜல்லிக்கட்டு நடத்த திமுக பிரமுகர் காஜாமலை விஜய் ஏற்பாடு செய்திருந்தார். பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்ததால் அவர் அந்த இடத்தை மாற்றி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினர். ஏனென்றால் மிகவும் பொதுமக்கள் அதிகமாக பயணிக்க கூடிய சாலை உள்புறம் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளையை பிடிக்கும் பகுதியில் முட்டியதில் சம்பவ இடத்தில் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் எப்படி மாநகருக்குள் ஜல்லிக்கட்டு நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments