இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பல வளைகுடா நாடுகள் தங்களது வான்வெளி பாதைகளை தற்காலிகமாக மூடியுள்ளன.
இதன் காரணமாக துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து வரவும் இருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதன் விளைவாக திருச்சி சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடிய காட்சியளித்தது.
வழக்கமாக வளைகுடா நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் தினசரி விமான சேவைகள் இயக்கப்படும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், திடீர் ரத்துச் செய்திகளால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments