இன்று இரவு திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் விபத்து பகுதியான முத்தரசநல்லூர் வேக தடை பகுதியில் சாலையில் கன ரக வாகனங்களில் இருந்து சிதறிய ஜல்லி கற்கள் பரவி கிடந்ததை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கரூர் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனம் 7 சிறப்பு உதவி ஆய்வாளர் பிரிடா ஜெபகுமாரி மற்றும் தலைமைக் காவலர் சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு உடனடியாக வந்து சாலையில் கொட்டி கிடந்த ஜல்லி கற்களை அகற்றி சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்தினர்.
மேற்கண்ட சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு விடயத்தில் சிறப்பாக பணியாற்றிய மேற்கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பிரிடா ஜெபகுமாரி மற்றும் தலைமைக் காவலர் சோமசுந்தரம் அவர்களின் பணிகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments