Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வெளி நோயாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் கூட இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள்

கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், குறிப்பாக  வெளி நோயாளிகளுக்கான கழிவறை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றது.

திருச்சி மாவட்டம் முசிறி, துவாக்குடி, மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அதிக மக்கள் வருகின்றனர். ஆனால்  மருத்துவ வல்லுநர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒரு சுகாதார உட்கட்டமைப்பு  வசதியும் இதுவரை மேம்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலும் வெளி நோயாளியாக காத்திருக்கும் மக்கள் மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளின் பங்கேற்பாளர்கள் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் ஆகியவற்றை திறந்த வெளியிலேயே செய்கின்றனர்.

நகர மக்களைப் போல் கிராமப்புற மக்கள் சுகாதார உட்கட்டமைப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இதனால் அவர்கள் கழிவறை இல்லை என்பதை ஒரு பொருட்டாக கருதாமல் புகார்கள் அளிப்பதற்கு கூட முன்வருவதில்லை. 

இதுபற்றி தன்னார்வ அமைப்பான   ஸ்கோப் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் கூறுகையில்…. பொதுவாகவே கிராமப்புற மக்களுக்கு கழிவறை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் வீடுகளிலேயே கழிவறைகள் இருந்தாலும், இன்று வரை மலம் கழிப்பதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் பொது வெளிகளை பயன்படுத்தும் நிலை தான் இருக்கின்றது.

இதனை சரி செய்வதற்காக அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதி உள்ளதா? அவர்கள் சரியான முறையில் பயன்படுத்துகின்றனரா என்று கண்காணித்தல் அவசிமாகிறது. 
மருத்துவர்களும் தன்னிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு கழிவறை பயன்படுத்துவது அவசியம் குறித்தும் அதனை சரியான முறையில் கழிவறைகளைப் பயன்படுத்தாவிடில் அதனால் ஏற்படும் நோய்த் தொற்று காரணங்களையும் கூறினால் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

அரசு மருத்துவர்கள் கூறும் பொழுது தற்போதுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை  ஒப்பிடும் பொழுது பல அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோயாளிகளுக்கான சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை குறிப்பாக முசிறி அரசு மருத்துவமனை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *