Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மார்ச் 9: சிறுகனூர் திமுக மாநாடு – போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுகனூரில் வரும் 09.03.2026 அன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மாநாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான தொண்டர்கள் மற்றும் மக்கள் கலந்து கொள்ள உள்ளதால், மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் 09.03.2026 அன்று காலை 06:00 மணி முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து வழித்தடங்களை பயன்படுத்த

கேட்டுக்கொள்ளப்படுகிறது:
மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள்:
மேற்கு மண்டலம் (கரூர், தொட்டியம் வழி): குளித்தலை – துறையூர் – நாகலாபுரம் – நக்கசேலம் – செட்டிகுளம் – இரூர் – ஆலத்தூர் – நெடுங்கூர் – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடல்.
தென் மண்டலம் (மதுரை வழி): துவரங்குறிச்சி – விராலிமலை – பஞ்சப்பூர் – மன்னார்புரம் – நம்பர் 1 டோல்கேட் – Y ரோடு – பனமங்கலம் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை – குமுளூர் கட் ரோடு – தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் மாநாட்டு திடல்.
தஞ்சாவூர் டெல்டா பகுதி: தஞ்சாவூர் – திருமலைசமுத்திரம் – பூதலூர் – பூண்டி – செங்கரையூர் பாலம் – அன்பில் – பூவாளூர் – குமுளூர் – தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் மாநாட்டு திடல்.
கடலூர் மற்றும் அரியலூர் பகுதி:

அரியலூர் – குன்னம் – பெரம்பலூர் – சிறுவாச்சூர் – ஆலத்தூர் – பாடலூர் – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடல்.
திண்டுக்கல் வழி: தங்கம்மாபட்டி – வையம்பட்டி – மணப்பாறை – ராம்ஜிநகர் – கருமண்டபம் – மன்னார்புரம் – நம்பர் 1 டோல்கேட் – ஒய் ரோடு – பனமங்கலம் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை – குமுளூர் கட் ரோடு – தச்சங்குறிச்சி – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடல்.
வடக்கு மண்டலம்: பெரம்பலூர் – சிறுவாச்சூர் – பாடாலூர் – சிறுகனூர் வழியாக மாநாட்டு திடல்.

அனைத்து கனரக வாகனங்களின் வழித்தட மாற்றம்:
சென்னையிலிருந்து திண்டுக்கல்: பெரம்பலூர் பைபாஸ் ரோடு – துறையூர் – முசிறி – குளித்தலை – மணப்பாறை – வையம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து மதுரை: பெரம்பலூர் பைபாஸ் ரோடு – துறையூர் – முசிறி – குளித்தலை – மணப்பாறை – புத்தாநத்தம் – துவரங்குறிச்சி வழியாகச் செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை: விராலிமலை – மணப்பாறை – குளித்தலை – முசிறி – துறையூர் – பெரம்பலூர் வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து கரூர்: பெரம்பலூர் பைபாஸ் ரோடு – துறையூர் – முசிறி – குளித்தலை – கரூர் சென்று வர வேண்டும்.

 


சென்னையிலிருந்து ராமநாதபுரம்: பெரம்பலூர் பைபாஸ் ரோடு – துறையூர் – முசிறி – குளித்தலை – மணப்பாறை – விராலிமலை வழியாகச் சென்று வர வேண்டும்.
அரியலூர்/டால்மியாவிலிருந்து சேலம், நாமக்கல்: டால்மியா – கீழப்பழுர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் மார்க்கமாகச் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் மாநாட்டிற்கு வருவோர் இந்த மாற்றங்களை அறிந்து காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப. அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *