எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகரத்தில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மன்னார்புரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோரத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

குறிப்பாக பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபின், மன்னார்புரம் ஒரு முக்கிய போக்குவரத்து பயன்பாட்டுப் பகுதியாக மாறியுள்ளது. மக்கள் இங்கு சாலையோரத்தில் மழையிலும், வெயிலிலும் சிரமப்பட்டு பேருந்துக்காக காத்திருப்பதை பல தினசரி நாளேடுகள் வாயிலாக என் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து, அங்கே ஒரு சிறந்த பயணிகள் நிழற்கூடத்தை எனது நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு நிதியின் மூலம் அமைக்க வேண்டி, கடந்த 25.09.2025 அன்று முதல் முயற்சி எடுத்தேன். அதன் தொடர்ச்சியாக 29.09.2025 அன்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலருக்கும், 08.10.2025 அன்று மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் முறையே நிர்வாக அனுமதிகள் மற்றும் அமைப்பு நடவடிக்கைகளுக்காக கடிதம் மூலம் கோரிக்கை வைத்தேன். மேலும், 28.11.2025 அன்று மன்னார்புரம் பகுதியில் நேரில் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தேன்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மாநகராட்சியையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து அனைத்து நிர்வாக அனுமதிகளும் பெறப்பட்டு, எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ₹ 60 லட்சம் செலவில் பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்காக இன்று (13.03.2026) அடிக்கல் நாட்டினேன்.
இந்தப் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுவதன் மூலம் மன்னார்புரம் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு மழை, வெயில் போன்ற காலநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரமங்களிலிருந்து பாதுகாப்புடன் காத்திருக்க வசதி கிடைக்கும்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கீதா பாலமுருகன் மாநகராட்சி அதிகாரிகள், கழக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ் மாணிக்கம், TTC சேரன், சிவ வடிவேல் (திருவாரூர் வடக்கு) மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments