Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்திரா கணேசன் நிறுவனங்களுக்கு ‘Green Champion Award’ – ரூ.1 லட்சம் பரிசு

திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டதற்காக “தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்” இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்க ளுக்கு “Green Champion Award” விருதை வழங்கியது. இந்த விருதுடன் ரூ.1,00,000 பணப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

2025 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரை இந்திரா கணேசன் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை (Department of Research and Development) பல்வேறு பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பாக செயல்பட்டது. மரக்கன்றுகள் நடுதல், உயிரினப் பல்வகைமையை பாதுகாப்பது, வளாக சுத்தம் மற்றும் பிளாஸ்டிக் இல்லா வளாக இயக்கம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, நீர் மற்றும் மின்சார சேமிப்பு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணிகள், பசுமை தொழில்நுட்ப கண்காட்சிகள், கிராமப்புற சுத்தம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு 15,000 மஞ்சப்பைகள் (Manjapai) வழங்கப்பட்டன. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இந்திரா கணேசன் நிறுவனங்களின் செயலாளர் எர். ஜி. ராஜசேகரன் அவர்களின் வழிகாட்டுதலிலும், நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றன. மேலும், நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைத் தலைவர் டாக்டர் எம். அனுசுயா அவர்கள் முழுமையான ஒருங்கிணைப்பில் இந்த பசுமை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க டாக்டர் கே. சித்ராதேவி, டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பாரத் குமார், டாக்டர் பி. வரலட்சுமி மற்றும் பேராசிரியர் டி. பவித்ரா ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

இந்த சாதனையை பாராட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் சிவரஞ்சனி ஆகியோர் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களுக்கு “Green Champion Award” விருதையும் ரூ.1 லட்சம் பணப்பரிசையும் வழங்கி பாராட்டினர்.

இந்த விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கல்வி நிறுவனங்கள் முன்னுதாரணமாக செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *