38 மாவட்டங்களைச் சேர்ந்த 61 விவசாய சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்
பாஜக அரசும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை, நிர்வாக ரீதியாக மக்களுடன் தொடர்பில் உள்ள திமுக அரசும் மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன் விவசாய விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் போராடாத கிராமங்களே இல்லை என்ற நிலையில் விவசாயிகளுக்கு எதிரான அரசாக திமுக உள்ளது, இந்த சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கான வாழ்வுரிமை மற்றும் நில உரிமை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்தள்ளுபடி, விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி கடன் தள்ளுபடி, சுங்க கட்டணம் ரத்து, தடுப்பணை மற்றும் கதவனை கட்டுவது, அணைகளின் நீர் கொள்ளளவை உயர்த்துவது போன்ற ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு என அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
மாறாக விவசாய நிலங்கள் விவசாயிகளுக்கு சொந்தமில்லை என்ற நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கொண்டுவந்து விவசாயிகளின் நிலங்களை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்த்துவிட்டது, இந்த இடங்களில் 33 சிப்காட் அமைத்து விட்டதாக கூறும் ஸ்டாலின் எத்தனை தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது என்பது குறித்து அறிவிப்பு வெளியிடாதது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
நீதிமன்றங்களை காரணம் காட்டி விவசாயிகளின் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கும் தனியார் முதலாளிகளும் பங்கிட்டு கொள்வதாகவும் குற்றம்சாட்டினர், இதனை தட்டி கேட்ட விவசாயிகளை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் நிகழ்வும் தமிழகத்தில் அரங்கேறி வருவதாகவும் தெரிவித்தார்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முகவரியை அளிக்கும் திமுக அரசுக்கு விவசாயிகள் வன்மையாக கண்டிப்பதாகவும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்பது விவசாயிகள் விரும்பவில்லை, வாக்களிக்க ஏற்க மாட்டோம் திமுக அரசுக்கு வாக்களிப்பது என்பது எங்களை தற்கொலைக்கு தள்ளிக் கொள்வதும் சமம் என்றும் உங்களது கோரிக்கைகளை உள்ளடக்கிய 38 கோரிக்கைகள் பிரகடனத்தை முன்மொழிந்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் கட்சிக்கு வாக்களிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறிவித்தார்.
அரசியல் கட்சியினருடன் சேர்ந்து விவசாய சங்கங்கள் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தும் முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்க இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் மாநாடு திருச்சியில் வருகிற மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளை அழிக்க வேண்டும் ஒடுக்க வேண்டும், விளைநிலங்களை அபகரிக்க வேண்டும், ஒட்டுமொத்த பேரழிவு திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒட்டுமொத்த கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள திமுகவை அகற்ற வேண்டும் என்ற முடிவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவிரி டெல்டாவில் மீத்தேன் மீத்தேன் எடுப்பது தடை செய்ய முடியாது அது காலத்தின் கட்டாயம் என்ன ஒரு தமிழக அமைச்சர் கூறும் நிலையில், எங்கள் உயிரை பணயம் வைத்து எங்கள் மண்ணை மீட்டெடுப்போம் என்பதுதான் விவசாயிகளின் கருத்து. மேலும் விவசாயிகளின் பல்வேறு கருத்துக்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்வாங்கப்பட்டு யாருடன் கூட்டணி மற்றும் யாருக்கு வாக்களிப்பது என்பது விரிவடைந்த ஆலோசனை கூட்டம் மற்றும் மாநாடாக திருச்சியில் அடுத்த நடைபெறும்.
கார்ப்பரேட் மோகம் கொண்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் விவசாய விரோதம் குறித்து அம்பலப்படுத்துவோம், ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தும் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், அவர்களை சந்திக்க எதிர்க்கட்சியினருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாய விரோதத் திட்டங்களை மட்டுமே திமுக செயல் படுத்துவது மிகப்பெரிய கொடுமை
தேர்தல் அறிக்கையினை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வரும் நிலையில், இறுதியாக வெளியிடும் பட்சத்தில் எந்த கட்சி விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கும் ஆய்வு செய்து அந்த கட்சிகளுக்கு ஆதரவளிக்க தயங்க மாட்டோம். விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் போட்டியிடும் இடங்களில் அவர்களுக்கு எதிராக விவசாயிகள் களத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொள்வோம். திமுகவிற்கு விவசாயிகள் வாக்களித்தால் தனது தலையிலேயே அவர்கள் கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள் என அர்த்தம்.
பிரதமர் மோடி ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆகியோருடன் பல கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன், தமிழகத்தில் சந்திக்காத மற்றும் இணைந்து செயல்படாத கட்சிகள் இல்லை. நில ஒருங்கிணைப்புச் சட்டம் மூலம் எங்களை அனாதைகள் ஆகும் பட்சத்தில் உரிமை பறிபோகும் நிலையில் எங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பறிபோய்விடும் என்று கூறினார் பி.ஆர் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
குறிப்பு படக்காட்சி திருச்சி எஃப் டி பி அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments