(14.03.2026) ம் தேதி காலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப, அவர்கள் BHEL – HRDC அரங்கத்தில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் ஆளிநர்களுக்கு (100) பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு காவல் நிலையங்களில் அணுகுவது மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், காவல் ஆளிநர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வாராந்திர ஓய்வு வழங்குதல் மற்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், எதிர் வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு காவல் ஆளிநர்கள் அனைவரும் திறம்பட பணிபுரிந்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பணிபுரிய அறிவுரைகள் வழங்கினார்.
அதேபோல், 14.03.2026-ம் தேதி மாலை 4.00 மணியளவில் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் திரு. M.R. சிபிசக்கரவர்த்தி, இ.கா.ப, அவர்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் சுமார் 150 பேருக்கு காவல் நிலையம் மற்றும் பொது

இடங்களில் பொதுமக்களிடம் எவ்வாறு அவர்களிடம் அணுகி பிரச்சனைகளை களைய வேண்டும் என்றும், அவர்கள் அளிக்கும் புகார்களை எவ்வாறு வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகளை வழங்கினார்.குறிப்பாக பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு காவல் நிலையங்களில் அணுகுவது மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

இவ்வாறு இரண்டு கலந்தாய்வு கூட்டங்களில் கலந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை துணைத்தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளை தவறாது கடைப்பிடித்து காவல் துறைக்கு எந்தவித களங்கமும் ஏற்படாவண்ணம் பணிபுரிய உறுதியேற்று சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments