Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் சிலிண்டர், எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து CPI சார்பில் ஒப்பாரி போராட்டம்!

சமையல் எரிவாயு, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் பற்றாக்குறை பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு மௌனம் காக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட NFIW, AlYF, AISF மாவட்ட குழுக்களின் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும், பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டமும் நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்கள். மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் மு.கண்ணகி, AITUC மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் க.சுரேஷ். மாதர் சங்க மாவட்ட செயலாளர் A. அஞ்சுகம், இளைஞர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எம். செல்வகுமார்,எம். ஜெய்லானி உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம் ராமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகுதி குழு, ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், மாதர் சங்க, இளைஞர் பெருமன்ற, மாணவர் பெருமன்ற பொறுப்பாளர்கள்உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பார்வதி நன்றி கூறினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *