திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களில் நடைபெற உள்ள தேர் திருவிழாக்களின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாக்களில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் 20.03.2026 (வெள்ளி) நடைபெறுகிறது. தோண்டிப் மதுர காளியம்மன் கோவில் தேரோட்டம் 31.03.2026 (செவ்வாய்) வரை நடைபெறுகிறது.
திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் – பங்கஜவல்லி கோவில் தேரோட்டம் 12.04.2026 (ஞாயிறு) நடைபெறுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் 14.04.2026 (செவ்வாய்) நடைபெறுகிறது.
உறையூர் ஸ்ரீவெக்காளியம்மன் கோவில் தேரோட்டமும் 14.04.2026 (செவ்வாய்) நடைபெறுகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் – மட்டுவார்குழலி கோவில் தேரோட்டம் 29.04.2026 (புதன்) நடைபெறுகிறது.
உத்தமர் கோவில் (மும்மூர்த்திகள் ஸ்தலம்) தேரோட்டம் 29.04.2026 (புதன்) நடைபெறுகிறது.
திருப்பைஞ்ஞீலி ஸ்ரீஞீலிவனேஸ்வரர் – விசாலாட்சி கோவில் தேரோட்டம் 30.04.2026 (வியாழன்) நடைபெறுகிறது.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் – மஹாசம்பத் கௌரி கோவில் தேரோட்டம் 30.03.2026 (திங்கள்) நடைபெறுகிறது.
திருச்சி தென்னூர் ஸ்ரீஉக்கிரமகாளியம்மன் கோவில் தேரோட்டம் 01.05.2026 (வெள்ளி) நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் – அரங்கநாயகி கோவில் தேரோட்டம் 14.05.2026 (வியாழன்) நடைபெறுகிறது.
அன்பில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேரோட்டம் 07.04.2026 (செவ்வாய்) நடைபெறுகிறது.

இந்த தேர் திருவிழாக்களை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு மத நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments