Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் 21.26 லட்சம் வாக்காளர்கள்: தேர்தல் பணிக்கு 14,000 அலுவலர்கள் – கலெக்டர் தகவல்

இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்:
30.03.2026 (திங்கட்கிழமை), வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்:
06.04.2026 (திங்கட்கிழமை), வேட்பு மனுக்கள் பரிசீலனை: 07.04.2026 (செவ்வாய் கிழமை), வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: 09.04.2026 (வியாழக்கிழமை), வாக்குப் பதிவு நாள்: 23.04.2026 (வியாழக்கிழமை), வாக்குகளை எண்ணும் நாள்: 04.05.2026 (திங்கட்கிழமை).

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2785 வாக்குச்சாவடி மையங்கள் (Polling Stations) 1226 வாக்குச்சாவடி அமைவிடங்கள் (Polling Station Locations) உள்ளன. 23.02.2026 அன்று வெளியிட்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 10,31,354 ஆண் வாக்காளர்களும், 10,94,642 பெண் வாக்காளர்களும், 307 இதர வாக்காளர்களும் என மொத்தம் 21,26,303 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 45 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை வீசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 என 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 27 பறக்கும் படை குழுக்களும் மற்றும் 27 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது 24 மணி நேரமும் இயங்கும். இக்குழுக்களை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தல் பணியில் 14,000 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள C-vigil App மற்றும் SUVIDHA செயலியிலும் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும். கட்டணமில்லா எண் 1800 599 0000 01 மற்றும் 0431-2905846, 0431-2905921, 0431-2905578, 0431-2905591, 0431-2905813 ஆகியவை கொண்ட கட்டுப்பாட்டு அறை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் முறை வாக்காளர்களாக (18-19வயது) 49015 இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்களான ஆண்-13100, பெண்-9305 இதர வாக்காளர் 01 என மொத்தம் 22406 வாக்காளர்களாக உள்ளனர். 7906 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), 3541 கட்டுப்பாட்டுக் கருவிகள் Control Unit 3810 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் (VVPAT) உள்ளிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கீழ்கண்ட விபரப்படி பின்பற்றப்பட வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ, அல்லது பல்வேறு மொழி பேசுபர்களிடையில், வெறுப்பைத் தூண்டும் வகையான அல்லது வேறுபாட்டை, பகைமையை வளர்க்கும் அல்லது தூண்டும் வகையான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

மற்ற அரசியல் கட்சிகள் குறித்த விமர்சனம் செய்யும்போது கட்சியின் கொள்கை குறித்தோ அல்லது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தோ இருத்தல் வேண்டுமே அன்றி தலைவர்களின் பொது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இறுத்தல் கூடாது,

மற்ற அரசியல் கட்சிகளையோ அல்லது கட்சியின் ஊழியர்களையோ விமர்சனம் செய்யும்போது நிருபணமாகாத ஊகத்தின் பேரிலான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவிர்க்க வேண்டும். வாக்கு சேகரிக்க சமுதாயம் மற்றும் சாதியினை பயன்படுத்தக் கூடாது.

வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ, பிரச்சார கூட்டம், பிரச்சாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது. வாகனம். ஊர்வலம், தற்காலிக கட்சி அலுவலகம். மற்றும் இதர அனுமதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள Suvidha App மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் காவல் துறையினர் உரிய வகையில் போக்குவரத்தை சரிசெய்யவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமிக்க எதுவாகும்.

தேர்தலுக்காக வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை தாக்கல் செய்யும் சமயத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தேர்தல் பிரச்சார கள் தேர்தல் நாளிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலம் நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களையோ அல்லது கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தையோ (அரசு. அரசு உதவி பெறும் அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள்) அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான விளம்பரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளரோ அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களோ வாக்குப்பதிவு நாள் அன்று நோடியாகனோ அல்லது மறைமுகமாகவோ, வாக்காளர்களை வசிப்பிடத்திலிருந்து வாக்குச் வாடிக்கோ, அல்லது வாக்குச்சாவடியிலிருந்து வசிப்பிடங்களுக்கோ வாகனங்கள் மூலம் அழைத்து செல்லக் கூடாது. இவ்வாறு செய்வது குற்றம் ஆகும்.

அரசு கட்டிடங்களில் எந்த வகையான அரசியல் கட்சிகளின் விளம்பரங்களும் செய்யக் கூடாது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களிலோ, சுவர்களிலோ தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது. கிராம ஊராட்சிகளில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் விளம்பரம் செய்ய வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து உரிய ஆணை கிடைக்கப்பெற்ற உடன் தேர்தல் விளம்பரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அரசு சொத்துகளில் இடம்பெற்றுள்ள அனைத்து சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், தாள்கள் அல்லது ஏனைய யாதொரு பதாகைள், கொடிகள் போன்றவை அகற்றப்பட வேண்டும்.

சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், தாள்கள் அல்லது ஏனைய யாதொரு வடிவத்திலான சுவரை உருக்குலைத்தல், உருவப்படங்கள், விளம்பரப் பலகைள் பதாகைள், கொடிகள் போன்ற அனைத்து அங்கிரிக்கப்படாத அரசியல் விளம்பாற்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *