தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.தொட்டியம்வட்டத்திற்குட்பட்ட 8 கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வருவாய் தீர்வாயம் பசலி 1435 (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயால் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற்ற தொடர்ந்து கிராம கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார், ஜமாபந்தியில் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எம் புத்தூர், தோளூர்பட்டி, காமலாபுரம், ஏழூர்பட்டி, நத்தம், நாகையநல்லூர், எம் களத்தூர், வாள்வேல்புத்தூர் ஆகிய

8 கிராம மக்கள் பட்டா மற்றும் வருவாய் துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர், தொடர்ந்து கிராம கணக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை பெற்று தீர்வு காணப்பட உள்ளது, நிகழ்ச்சியில் தொட்டியம் வட்டாட்சியர் லஜபதிராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்,

தொடர்ந்து தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி நடைபெறும் என்பதை குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments