திருச்சிராப்பள்ளி மாவட்டம். மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி கிராமம், புல எண் : 38,39,40,41,42,43,44,46,47,50,51,52 மற்றும் 53-ல் துவக்கப்பட இருக்கும் தி/ள்.அல்ட்ரா மரைன் & பிக்மென்ட் லிமிடெட், கனிம நிறமிகள் மற்றும் சிக்கலான கனிம நிறமிகளின் உற்பத்திக்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டமானது 18.03.2026 (புதன் கிழமை) அன்று தி/ள்.அர்ச்சனா திருமண மஹால், எண்.13/4854, திருச்சி ரோடு, பொத்தமேட்டுப்பட்டி, மணப்பாறை வட்டம், திருச்சியில் ஆட்சித்தலைவர் அவர்களது தலைமையில் நடைபெறுவதாக மாவட்ட இருந்தது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026-க்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 18.03.2026 அன்று நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments