Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி திருவெறும்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பறிமுதல் .

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழக முழுவதும் நேற்று தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் சாலையில் டீம் B பிரிவை சேர்ந்த நாகலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடலைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது காரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த தொகையினை திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் உதவி நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *