தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள், நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் சாலைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தி விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாக்காளர்களை பாதிக்க சட்டவிரோதமாக பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதைத் தடுக்கும் வகையில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

மேலும், சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அனைத்தும் வெள்ளை பெயிண்ட் அடித்து மறைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பல குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினருடன் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல்துறையினரும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் சோதனையில் ஒத்துழைக்கவும், அதிக அளவு பணம் அல்லது மதிப்புள்ள பொருட்களுடன் பயணம் செய்யும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments