இன்று (17.03.2026) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன்.
இந்த சந்திப்பின்போது, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் முன்மொழியப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் (Elevated Corridor) திட்டம்
நீண்ட காலமாக விரிவான திட்ட அறிக்கை (DPR) கட்டத்தில் உள்ள நிலையில் இருப்பதால், அதன் தற்போதைய நிலை மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவு வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்.
இதுகுறித்து தற்போதைய நிலை குறித்த அறிக்கையை வழங்குவதாக
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments