மண்ணச்சநல்லூர் அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோவிலில் வருடத்திற்கு 3 நாட்கள் மட்டும் நடைபெறும் அதிசய சூரியபூஜை நிகழ்வு – திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவில் மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதுடன் 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்புரிவதாக ஐதீகம்.

2000 ஆண்டுகள் பழமையான திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம், திருவானைக்காவல் பாப்பம்மாள் சத்திர கட்டளைக்கு உட்பட்ட இத்திருக்கோவிலில் ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அவர்களின் அருளானையின்படி ஒவ்வொரு பங்குனி மாதம் 9 மற்றும் 10,11 ஆகிய தேதிகளில் சூரியபூஜை சிறப்புடன் நடைபெறும்.
அதன்படி நடப்பு பங்குனி மாதம் பத்தாம் தேதியான இன்று நடைபெற்ற சூரிய பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று பூமிநாத சுவாமி மற்றும் அறம்வளர்த்த நாயகி அன்னையை வழிபட்டுச் சென்றனர்.

சூரிய உதயத்தின்போது சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மெல்ல மெல்ல பிரகாரத்தினுள் வந்து மூலஸ்தானத்தில் உள்ள பூமிநாத சுவாமி மீது தனது ஒளிக்கதிரை பாய்ச்சி பூமிநாத சுவாமி பிரகாசமாக காட்சியளித்த அதிசய சூரிய பூஜை நிகழ்வு நடைபெற்றபிறகு, சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments