Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியில் 8 சுகாதார செவிலியர் பணி: ஆகஸ்ட் 21-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைங்களில் உள்ள 8 நகர சுகாதார செவிலியர்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன்படி, 8 நகர சுகாதார செவிலியர்கள் (பிளஸ் 2 முடித்து, டி.பிஎச்-ன் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இரண்டாண்டு ஏ.என்.எம் பயிற்சி முடித்தவர் விண்ணப்பிக்கலாம்) – ஊதியம் ரூ. 18000

இந்தப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளது. எக்காரணத்தை கொண்டும் பணிவரன் முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை மாநகர் நல

அலுவலர், பொது சுகாதாரப் பிரிவு (மையஅலுவலகம்), திருச்சி மாநகராட்சி, பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி-620001 என்ற அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *