Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சாரநாதன் கல்லூரியில் பாஸ்போர்ட் விண்ணப்ப முகாம்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் திருச்சி பாஸ்போர்ட் சேவைகள் மையம் இணைந்து 19-03-2025 அன்று மாணவர்களுக்காக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க முகாம் ஒன்றினை நடத்தியது.

இம்முகாமிற்கு K. கார்த்திகேயன், குடிமக்கள் சேவை மேலாளர், Tata Consultancy Service, கடவுச்சீட்டு சேவைகள் மையம், திருச்சி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

கல்லூரியின் செயலர் S. ரவீந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். முதல்வர் Dr. D. வளவன் அவர்கள் முன்னிலை வகித்தார். இம்முகாமில் சுமார் 119 மாணவர்கள் கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்து பயன் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலலப்பணித்திட்ட அலுவலர் Dr. K. கார்த்திகேயன் அவர்கள் செய்திருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *