Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருட்டு விவகாரம்: மரக்கட்டையால் அடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

கடந்த 28.05.2023-ந்தேதி இரவு கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவேரி பாலத்தின் கீழே அங்கோயே தங்கி கட்டுமான பணிபார்த்து கொண்டிருந்த வடிவேலு என்பவரிடமிருந்து, அவர் உறங்கி கொண்டிருந்தபோது அவருடைய செல்போன் மற்றும் பணத்தை கீழ சிந்தாமணியை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருடியதாக வடிவேலு மற்றும் நான்கு நண்பர்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில்

கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியை சேர்ந்த எதிரி வடிவேலு 25/26 த.பெ. சடையமுத்து, அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் 30/26, த.பெ.சாமிதுரை மற்றும் மூன்று நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, மேற்படி எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி கடந்த 09.08.2023-ந்தேதி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.

இவ்வழக்கை விசாரித்த இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி திருச்சி அவர்களால் இன்று 24.03.2026-ந்தேதி மேற்படி வழக்கின் எதிரி வடிவேல் என்பவருக்கு இ.த.ச.பிரிவு 302-ன்படி ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும், சரத்குமார் என்பவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *