திருச்சிராப்பள்ளி மாவட்டம், இராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டி,
சந்திரன் நகர் பகுதியில் கடந்த 20.02.2026 அன்று சுமார் 7,000 கிலோ கஞ்சாவை சட்டவிரோதமான விற்பனைக்காக வைத்திருந்த 1. தீனதயாளன் 27/26, த.பெ ராஜா, ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜிநகர், 2.தரனேஸ்வரன் 20/26, த.பெ. ராஜா, ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜிநகர், 3.ஆனந்த் 23/26, த.பெ. ரெங்கநாதன், வீதிவடகம், காட்டூர், 4.ஜெயசூர்யா 22/26, த.பெ. மாரிமுத்து, பெருமாள் கோவில் தெரு, அல்லித்துறை, 5.ராஜாராம் 33/26, த.பெ. பால்ராஜ், ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜிநகர், திருச்சி மாவட்டம்

என்பவர்கள் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய குற்ற எண். 67/26, U/s 8(C), r/w 20(b), (ii) (B) of NDPS Act 20.02.2026 தினமே எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். ,
* இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் எதிரிகள் 1. தீனதயாளன் 27/26, த/பெ ராஜா, ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜிநகர், 2. தரனேஸ்வரன் 20/26, த.பெ. ராஜா, ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜிநகர், 3. ஆனந்த் 23/26, த.பெ. ரெங்கநாதன், வீதிவடகம், காட்டூர், 4. ஜெயசூர்யா 22/26, த.பெ. மாரிமுத்து, பெருமாள் கோவில் தெரு, அல்லித்துறை, 5. ராஜாராம் 33/26, த.பெ. பால்ராஜ், ஹரிபாஸ்கர் காலனி,

ராம்ஜிநகர், திருச்சி மாவட்டம் என்பவர்களை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (25.02.26) சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 35 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments