Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர்: ஆவணமின்றி கொண்டு வந்த ₹55,600 பறிமுதல்!

திருவெறும்பூர் அருகே பழைய இரும்பு வியாபாரி உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ 55 ஆயிரத்து 600 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக சட்ட மன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைப்பெறுகிறது இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் வாக்களர்களுக்கு ஒட்டுக்கு பணம் கொடுப்பதற்காகஉரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்வதும் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வது குற்றமாகும் இதனால் அவற்றை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தொகுதி வாரியாக பறக்கும் படையினரை நியமித்து உள்ளது.

அதன் அடிப்படையில் பறக்கும் படையினர் கண்காணித்து வருவதுடன் ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் ஈடுபட்டு வருகின்றனர் அப்படி உரிய ஆவணம் இல்லாமல் ரூ 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்பவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை
புதுக்கோட்டை விராலிமலை வடுகப்பட்டி கல்லூர் பட்டி சாலையை சேர்ந்தவர் சிவசங்கர் (58) இவர் பழைய இரும்பு வியாபாரம்செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பழைய இரும்பு மற்றும் பலகை வாங்குவதற்காக ரூ 55 ஆயிரத்து 600 பணத்தை எடுத்துக்கொண்டு மினி லாரியில் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்த பொழுது வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் எஸ் டி குழுவினர் சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்து வருவது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவெறும்பூர் தாசில்தாரும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *