Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு: அரியமங்கலத்தில் உற்சாக வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளைச் சந்தித்து இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரியமங்கலம் பால் பண்ணை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

அப்போது வணிகர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து ஆதரவு கோரினார்.
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்டத் தலைவர் எஸ்.பி. பாபு, ஹக்கீம், மாநில இணைச்செயலாளர் என்.டி. கந்தன், இளைஞர் அணி கோபால் மற்றும் வணிகர் சங்கங்களின் இணைப்பில் உள்ள பல்வேறு கிளைச் சங்கங்களின் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *